search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி சொத்து மதிப்பு"

    பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498. அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது. #PMModi #Modi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 2017-18-ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் கையிருப்பு தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதன்படி மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498.

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் மோடிக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. அதன் மதிப்பு ரூ.1 கோடி. காந்திநகர் பாரத ஸ்டேட் வங்கி என்.எஸ்.சி.எச். கிளையில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 இருப்பு தொகை உள்ளது.



    அதே கிளையில் அவருக்கு ரூ.1 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 288 வைப்பு நிதி உள்ளது. இவை தவிர ரூ.20 ஆயிரத்துக்கு வரிசேமிப்பு பத்திரங்கள் உள்ளன. இவை 2012-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி அன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்து 18 ஆயிரத்து 235 ரூபாய்க்கு தேசிய சேமிப்பு சான்றிதழும், 1 லட்சத்து 59 ஆயிரத்து 281 ரூபாய்க்கு எல்.ஐ.சி. பாலிசியும் உள்ளது.

    அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 67 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கையிருப்பு இருந்தது.

    மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு தங்க நகைகள் எதுவும் வாங்கவில்லை. அவருக்கு சொந்தமாக 4 மோதிரங்கள் மட்டுமே உள்ளது. 45 கிராம் எடையுள்ள அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 60.

    மோடியின் பெயரில் கார் எதுவும் இல்லை. மேலும் சமீபத்தில் அவர் மோட்டார் வாகனம், விமானம், கப்பல், உல்லாச படகு போன்ற எதுவும் வாங்கவில்லை. வங்கிகளில் அவர் கடன் எதுவும் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. #PMModi #Modi

    ×